தங்கத்துக்கு போட்டியாக உயரும் வெள்ளி விலை - இன்று எவ்வளவு தெரியுமா?
கிராம் ஒன்று நேற்று ரூ.30 குறைந்த தங்கம் விலை, இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலை, நாளுக்கு நாள் மாற்றத்தை கண்டு வருகிறது. அப்படி, கடந்த வருடம் கணிசமான ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, 2024 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அதிரடி காட்டியது. மேலும், 2025 தொடக்கத்தில் இருந்து சரசரவென அதிகரித்த தங்கம் விலை, அக்டோபர் 17 ஆம் தேதி அன்று ரூ.97 ஆயிரத்தில் வந்து நின்றது. இதனால், நகைப்பிரியர்கள் மற்றும் சாமானிய மக்கள் ஆடிப்போனார்கள்.
இந்த வருடத்திற்கு ஒரு பவுன் தங்கம் லட்சத்தைத் தொடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக தங்கம் விலை மளமளவெனக் குறையத் தொடங்கியது. இப்படியே குறைந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும்போது, காலை மாலை என இரண்டு முறை மாற்றத்தைக் கண்டு தங்கம் விலை கண்ணாம்பூச்சி ஆடியது.
அந்த வகையில், மூன்று நாட்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று கிராமுக்கு வெறும் ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,480-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,060
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.96,480
வெள்ளி 1 கிராம் - ரூ.201
வெள்ளி 1 கிலோ - ரூ.2,01,000
கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| டிசம்பர் 3 | ரூ.12,060 | ரூ.96,480 |
| டிசம்பர் 2 | ரூ.12,040 | ரூ.96,320 |
| டிசம்பர் 1 | ரூ.12,070 | ரூ.96,560 |
| நவம்பர் 30 | ரூ.11,980 | ரூ.95,840 |
| நவம்பர் 29 | ரூ.11,980 | ரூ.95,840 |
| நவம்பர் 28 | ரூ.11,840 | ரூ.94,720 |
| நவம்பர் 27 | ரூ.11,770 | ரூ.94,160 |
| நவம்பர் 26 | ரூ.11,800 | ரூ.94,400 |
| நவம்பர் 25 | ரூ.11,720 | ரூ.93,760 |
| நவம்பர் 24 | ரூ.11,520 | ரூ.92,160 |
அதாவது, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.12,060-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கும் விற்பனை. அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.201-க்கும், கிலோ ரூ.2,01,000 -க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த வெள்ளியின் விலை, இன்றைய நிலவரப்படி 200-யை தாண்டி, ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.