அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் தீ விபத்து: இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைப்பு
அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் நடந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு, 2-வது அவென்யூவில் ஜிஎஸ்டி ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று காலை 8.30 மணியளவில், இந்த அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கேன்டீனில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அது சிறிது நேரத்தில் தீயாக மாறி மளமளவென பெண் அதிகாரிகள் ஓய்வறை மற்றும் இதர அறைகளுக்கு பரவியது.