வெல்லும் தமிழ்ப் பெண்கள்! தமிழிசையுடன் கனிமொழி! அரசியல் கடந்த நாகரீகம்! சபாஷ் Kanimozhi!

வெல்லும் தமிழ்ப் பெண்கள்! தமிழிசையுடன் கனிமொழி! அரசியல் கடந்த நாகரீகம்! சபாஷ் Kanimozhi!

கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள காரணம்பேட்டை பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. 

இந்த மாநாட்டுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமை தாங்குகிறார். 234 தொகுதிகள் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். 234 தொகுதிகளில் இருந்தும் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டில் ஸ்டாலின் பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

 இந்த நிலையில் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கனிமொழி, கனிமொழி சோமு, தமிழச்சியுடன் தமிழிசை சவுந்திரராஜனும் ஒரு பிளைட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த தமிழிசை கட்சி பாகுபாடில்லாமல் பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் தனது கட்சியில் தலைவராகவும் ஆளுநராகவும் பதவி வகித்திருந்தார். அவர் தமிழர் என்பதால் நம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான். எல்லாவற்றுக்கும் மேல் ஊழல் கறை படியாதவர் தமிழிசை. பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்காக குரல் கொடுப்பவர். மாற்றுக் கட்சியை சேர்ந்த தமிழிசைக்கும் இடம் கொடுத்த கனிமொழிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தும், முன்னாள் முதல்வரான கருணாநிதியும் கட்சி வேறுபாடுகளை களைந்து நட்பு பாராட்டியது போல் இன்று அவரது வாரிசுகளும் இருக்கிறார்கள். அரசியல் வேறு நட்பு வேறு அதாவது அரசியல் வேறு நட்பு வேறு, இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்பதுதான் இதன் சாராம்சம். அதிலும் கனிமொழி, கனிமொழி சோமு, தமிழிசை, தமிழச்சி ஆகிய 4 பேரையும் ஒன்று சேர்த்தது தமிழ் என்ற ஒற்றை வார்த்தைதான்.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது ஆளுமையை தைரியத்தை, சாதனையை கனிமொழி பாராட்டாமல் இருந்ததே இல்லை. கனிமொழிக்கு பாராட்டு அரசியலில் அப்போது பெண்கள் அரிதாக நுழையும் காலகட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் கடைசி வரை தைரியமாக எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா என்ற பொருள்படும்படியான கருத்தை ஏற்கெனவே கனிமொழி ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.

தற்போது வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற புகைப்படத்தை போட்டுள்ளதால் கனிமொழிக்கு பாராட்டுகள் குவிகின்றன.