“திருப்பரங்குன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பதற்றம் உருவாக்குகிறது திமுக அரசு” - இபிஎஸ்

“திருப்பரங்குன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பதற்றம் உருவாக்குகிறது திமுக அரசு” - இபிஎஸ்

 “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக அரசு” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக எதிர்வினை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, “பாஜக, ஆர்எஸ்எஸ்சின் கைக்கூலியாக மாறி அண்ணா திமுகவை அமித் ஷா திமுகவாக மாற்றிய பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.

மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.