வேலை வேண்டுமா? சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (டிசம்பர் 20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலை வேண்டுமா? சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாவட்ட வாரியாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் இன்று 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

சென்னையில் வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.