தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, 90,800-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.11,350-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.