கணவர் கொடுமைப்படுத்தியதாக புகார்.. ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

கணவர் கொடுமைப்படுத்தியதாக புகார்.. ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!
தனது கணவர் கொடுமைபடுத்தியதாக புகார் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி அவர் 50 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் மிஸ் இந்தியா அழகியும் பாலிவுட் நடிகையுமான செலினா ஜெட்லி தனது கனவர் பீட்டர் ஹாக் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். தனது 3 குழந்தைகளை ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த தனது கணவர் பீட்டர் சந்திக்க விடாமல் தடுப்பதாகவும்,
தனது வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள செலினா ஜெட்லி, அவரிடம் இருந்து பராமரிப்பு தொகையாக மாதம் 10 லட்சம் ரூபாய் பெற்றுத்தர வேண்டும் எனக்கூறியுள்ளார்.
மேலும், இழப்பீடாக 50 கோடி ரூபாயும் தனது கணவர் தரவேண்டும் என மும்பை அந்தேரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீட்டர் ஹாக்கிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.