பிஹாரில் 51 வேட்பாளர்கள்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பிஹாரில் 51 வேட்பாளர்கள்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் முதல் முறை​யாக களம் இறங்​கி​யுள்ள ஜன் சுராஜ் கட்சி, 51 வேட்​பாளர்​கள் அடங்​கிய முதல் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டது. இந்த பட்டியலை கட்சித் தலைவர் பிர​சாந்த் கிஷோர் வெளியிட்டார்.

இவர்களில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளந்தா திறந்தவெளி பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி கிரி, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உட்பட பலர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் பிர​சாந்த் கிஷோர் பெயர் இடம் பெற​வில்​லை. 2-வது வேட்​பாளர் பட்​டியலில் அவரது பெயர் வெளி​யாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.