நந்தினி நிறுவனத்தின் பெயரில் கலப்பட நெய்: பெங்களூரு தம்பதி கைது

நந்தினி நிறுவனத்தின் பெயரில் கலப்பட நெய்: பெங்களூரு தம்பதி கைது

நந்​தினி என்ற பெயரில் கர்​நாடக கூட்​டுறவுப் பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டமைப்​பு, பால், தயிர், நெய் உள்​ளிட்ட பொருட்​களை தயாரித்து விற்​பனை செய்து வரு​கிறது.

நந்​தினி விநி​யோகஸ்​த​ரான மகேந்​திரா திருப்​பூரை அடுத்​துள்ள‌ ஆலங்​கட்​டி​பாளை​யம் பகு​தி​யில், கிருஷ்ணா எண்​டர்​பிரைசஸ் என்ற பெயரில் ஆலை ஒன்றை நடத்தி வந்​தார். அதில் நந்​தினி பெயரில் டால்​டா, பாமா​யில், தேங்​காய் எண்​ணெய் போன்​றவற்றை கலப்​படம் செய்து நெய் தயாரித்து மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பெங்​களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 14-ம் தேதி மகேந்​தி​ரா​வின் ஆலை​யில் சோதனை நடத்​தி, அங்கு இருந்த ரூ.56.95 லட்​சம் மதிப்​பிலான 8 ஆயிரத்து 136 லிட்​டர் நெய்யை பறி​முதல் செய்​தனர். ஆலைக்கு சீல் வைத்​ததுடன், மகேந்​தி​ரா உள்ளிட்ட 4 பேரை கைது செய்​தனர்.

அவர்களிடம் நடத்​திய விசா​ரணை​யில் பெங்​களூருவை சேர்ந்த சிவகு​மார், ரம்யா தம்​ப​தி​யினர் ஆலங்​கட்​டி​பாளை​யத்​தில் நந்​தினி பெயரில் கலப்பட நெய் தயாரித்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து பெங்​களூரு போலீ​ஸார் சிவகு​மாரை​யும், அவரது மனைவி ரம்​யா​வை​யும் நேற்று கைது செய்​தனர்.

சாம்​ராஜ்பேட்​டை​யில் அவர்​களுக்கு சொந்​த​மான கிடங்கை சோதனை​யிட்ட போலீ​ஸார் அங்​கிருந்த ரூ.1.26 கோடி மதிப்​பிலான இயந்​திரங்​கள், 4 கார்​கள், ரூ.1.19 லட்​சம் உள்​ளிட்​டவற்​றை பறி​முதல்​ செய்​தனர்​.