இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரப்போறதெல்லாம் நல்ல செய்தி தான்!

மேஷம்: துரித முடிவுகளை எடுக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் முடிவெடுக்கும்போது பிறரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நிதி தொடர்பான செயல்களில் முடிவெடுப்பதற்கு முன் உரியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ரிஷபம்: எந்தவொரு வருத்தமோ அல்லது கவலையோ இன்றைக்கு ஏற்படாது. நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். செயல்பாடுகளை மிகைப்படுத்த வேண்டாம். யதார்த்தமாகவும், நியாயமாகவும் இருக்க முயற்சிக்கவும்.
மிதுனம்: தினசரி வேலைகளில் இருந்து ஒரு இடைவெளி எடுத்து கொள்ளலாம். புத்துணர்வு பெற இன்ப சுற்றுலா மேற்கொள்ளலாம். எதிர்பாலினத்தவரிடமிருந்து இயல்பாகவே ஆதரவு கிடைக்கும். மாலை நேரத்தில் தியானம் செய்வது அல்லது உங்களை உற்சாகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம்: உங்கள் வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணியை விரைவாகவும், கவனமாகவும் முடிப்பீர்கள். வேலைக்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். நண்பர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்: இன்று சில நற்செய்திகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே கொடுக்கும். பணியிடத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். உங்கள் உள்ளார்ந்த திறமைகளுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளும், சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவும் கிடைக்கும்.
கன்னி: உங்கள் பேச்சுத்திறமை மற்றும் படைப்பாற்றலே வல்லமை மிக்க ஆயுதங்கள். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும், மகிழ்ச்சியையும் நீங்கள் பரப்ப வேண்டும். இன்று உங்கள் கற்பனைத் திறன் முழுமையாக வெளிப்படும்.
விருச்சிகம்: பணியிடத்தில் சில சிக்கல்கள் நேரிடும். சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்காது. தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் புதுமுகங்களுக்கு நேர்காணலில் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.
தனுசு: இன்று உங்களிடமிருந்து பணம் எளிதாக கைநழுவும் வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைக்க முயலுங்கள். நாள் முழுவதும் நிதி தேவைகளை சமாளிக்க முயற்சித்தாலும், மாலை வேளையில் நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும். அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்புவீர்கள்.
மகரம்: எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். திடீரென எதிர்பாராத லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்பதை கவனமாக ஆலோசிக்க வேண்டும்.
கும்பம்: அனைத்தையும் தெரிந்துக் கொள்ளவேண்டும். உங்கள் சொந்த நலனுக்காக எதிரிகளின் திட்டங்களை நீங்கள் தவிடுபொடியாக்குவீர்கள். குறிப்பாக, கடுமையான சூழலில் உங்களுடைய வலிமையை நீங்கள் நிரூபிப்பீர்கள்
மீனம்: வாழ்க்கையில் நிதி திட்டமிடல் என்பது மிகவும் முக்கியமானது. இன்று அதற்காக உங்கள் ஆற்றலை நீங்கள் செலவிடுவீர்கள். குடும்பத்தில் ஒருவர் எதிர்பாராமல் நோய்வாய்ப்படுவது கவலையைத் தரும். இருப்பினும், விரைவில் அது சரியாகிவிடும். இதை நினைத்து கவலைப்பட வேண்டாம்.