மீண்டும் விளம்பரப் படங்களில் அஜித்?

மீண்டும் விளம்பரப் படங்களில் அஜித்?

விளம்பரப் படங்களில் நடிகர் அஜித்குமார் நடிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகர்கள் பலர் விளம்பரப் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் முன்னணி நடிகரும், பல லட்சம் ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவருமான அஜித்குமார் பல வருடங்களாக விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் அவர் விளம்பரப் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் எனவும், அதன் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது அஜித்குமார் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அவர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே உண்மை எனத் தெரிய வரும்.