14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும் 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் உதவியாளராக தேதியூரைச் சேர்ந்த லலிதா(39) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்தபோது பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மாணவனை லலிதா கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஊட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த மாணவனை கட்டாயப்படுத்தி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தனர். இதனையடுத்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் லலிதா ஊட்டியில் இருந்து அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் விடுதியில் தங்கியுள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று லலிதாவை கண்டுபிடித்து சிறுவனை மீட்டனர். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் போகோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லலிதாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றச்சாட்ட பெண் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.

அதனைத் தொடந்து, இந்த வழக்கு விசாரணை திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி சரத்ராஜ்  தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் லலிதாவிற்கு 54 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.