தந்தை பெரியார் புகைப்படம் மீது போஸ்டர் ஒட்டியே பிஜேபி... விசிக சாலை மறியலால் பதற்றம்...
வெண்ணந்தூர்:பெரியார் போஸ்டர் மீது பிஜேபி நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்...
தந்தை பெரியார் புகைப்படம் மீது போஸ்டர் ஒட்டியே பிஜேபி... விசிக சாலை மறியலால் பதற்றம்...
பெரியார் போஸ்டர் மீது பிஜேபி நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் தந்தை பெரியாரியன் 145 ஆவது பிறந்தநாள் விழாவிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெண்ணந்தூர் பேரூர் கழகம் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது...
இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெண்ணந்தூர் ஒன்றிய பிஜேபினர் பெரியாரின் போஸ்டர் மீது இரவோடு இரவாக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிஜேபியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி வெண்ணந்தூர் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...