ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது மத்​தி​யஸ்​தம் செய்​த​தாக சீனா கூறியதற்கு என்ன பதில்? - பிரதமருக்கு காங்​கிரஸ் கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது மத்​தி​யஸ்​தம் செய்​த​தாக சீனா கூறியதற்கு என்ன பதில்? - பிரதமருக்கு காங்​கிரஸ் கேள்வி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை நிறுத்த, இந்​தியா - பாகிஸ்​தான் இடையே மத்​தி​யஸ்​தம் செய்​த​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார்.

இந்​நிலை​யில், சீன வெளி​யுறவுத்​ துறை அமைச்சர் வாங் யீ நேற்று அளித்த பேட்​டி​யில், “இந்​தாண்​டில் சீனா தலை​யிட்ட முக்​கிய விஷ​யங்​களின் பட்​டியலில் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட பதற்​ற​மும் ஒன்​று” என குறிப்​பிட்​டார். இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அருணாச்​சலப் பிரதேச விஷ​யத்​தில் சீனா தொடர்ந்து எதி​ராக செயல்​படு​கிறது. இது போன்ற சூழலில் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் சீனா ஆற்​றிய பங்கு என்ன என்​பது குறித்து நாட்டு மக்​களுக்​கு தெளிவுபடுத்​த வேண்​டும். இவ்​​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.