விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
“தமிழ்நாட்டில் 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, ரயில்களின் நேரம் மற்றும் ஜனவரி 01 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.”
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயிலின் வேகம் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடம், ரயில் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் பல்வேறு வந்தே பாரத் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் விரைவு, பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டிற்கான விரைவு மற்றும் பயணியர் ரயில்களில் புதிய கால அட்டவணை ஜனவரியில் அமல்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் விரைவு ரயில்களில் வேகத்தை அதிகரிக்கவும், பல்வேறு வழித்தடங்களில் புதிய பாதைகளை மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதைகளை மேம்படுத்துவதுடன் நவீன சிக்னல் தொழில்நுட்பம் தெற்கு ரயில்வே சார்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பிரதான ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் வேகமாகவும், பல்வேறு இடங்களுக்கு 30 முதல் 40 நிமிடங்கள் பயணம் நேரத்தை குறைக்கும் வகையில், ரயில் அட்டவணைகள் வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணையின் படி, சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை முதல் திருநெல்வேலி, சென்னை முதல் செங்கோட்டை பொதிகை உட்பட 7 விரைவு ரயில்கள் நேரம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுபோக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் 10 நிமிடங்கள், தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முத்து நகர் விரைவு ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை ஜனவரி 1 முதல் அமலாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை – கோவை, சென்னை – மதுரை – கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தற்போதை விட 30 முதல் 40 நிமிடங்கள் பயணம் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், மாலை 5:55 மணிக்கு புறப்பட்டு காலை 4:00 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில், இரவு 7:35 புறப்பட்டு காலை 6:40 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை விரைவு ரயில் 8:50 மணிக்கு புறப்பட்டு காலை 7:00 மணிக்கு சென்றடையும்.
சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் மதியம் 3:05 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு செல்லும். சென்னை தாம்பரம் முதல் கொல்லம் செல்லும் முறையில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1:15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:10 மணிக்கு சென்றடையும் என இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ரயில்வே அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin Jan 16, 2026 0 94
Admin Jan 17, 2026 0 69
Admin Jan 18, 2026 0 62
Admin Jan 20, 2026 0 55
Admin Jan 20, 2026 0 53
Admin Oct 24, 2025 0 38
Admin Oct 24, 2025 0 27
Admin Oct 24, 2025 0 48
Admin Oct 24, 2025 0 17