சென்னை எழும்பூர் - ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை: அடுத்த மாதம் பிரதமர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்ப்பு

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை: அடுத்த மாதம் பிரதமர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்ப்பு

 சென்னை எழும்​பூர் - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெற்கு ரயில்​வே​யில் சென்னை சென்ட்​ரல் - மைசூரு, சென்னை சென்ட்​ரல்- கோவை, சென்னை சென்ட்​ரல் -விஜய​வா​டா, எழும்​பூர் - திருநெல்​வேலி, எழும்​பூர் - நாகர்​கோ​வில் வந்தே பாரத் ரயில் உட்பட 10-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மற்ற விரைவு ரயில்​களை காட்​டிலும் வந்தே பாரத் ரயில் வேக​மாக​வும், சொகு​சாக​வும் இருப்​ப​தால், பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

இந்​துகளின் புனித தலமான ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமி கோயிலுக்கு வெளி​மாநிலங்​களில் இருந்து அதிக அளவில் பக்​தர்​கள் வந்து செல்​வ​தால், அவர்​களின் போக்​கு​வரத்து வசதியை அதி​கரிக்​கும் வகை​யில் வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

சென்னை எழும்​பூரில் இருந்து அதி​காலை 5.30 மணிக்​குப் புறப்​பட்​டு, திருச்​சி, காரைக்​குடி வழி​யாக ராமேசுவரத்தை அதே​நாள் மதி​யம் 1.15 மணிக்கு அடை​யும். இந்த ரயில் தாம்​பரத்​தில் அதி​காலை 5.50 மணிக்​கும், விழுப்​புரம் சந்​திப்​பில் காலை 7.18 மணிக்​கும், திருச்சி சந்​திப்​பில் காலை 9.15 மணிக்​கும், புதுக்​கோட்​டை​யில் காலை 9.58 மணிக்​கும், காரைக்​குடி சந்​திப்​பில் காலை 10.38 மணிக்​கும், சிவகங்​கை​யில் முற்​பகல் 11.13 மணிக்​கும், ராம​நாத​புரத்​தில் நண்​பகல் 12.13 மணிக்​கும் நின்​றுசெல்​லும்.