துலாம் ராசிக்காரர்களுக்கு இதுதான் சரியான நேரம் - உங்க ராசிக்கு எப்படி?
டிசம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
மேஷம்: பழைய நினைவுகள் உங்களை இன்று சூழ்ந்து கொள்ளலாம். அதனால், அமைதியாக இருப்பீர்கள். செலவுகளை சிறிது கட்டுப்படுத்தி, எதிர்காலத்திற்கான சேமிப்பின் தேவையை உணர்வீர்கள்.
ரிஷபம்: இன்று சிறிது கடுமையாகவும், ஆளுமையுடனும் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் சந்திக்கும் மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும். பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வழக்கமான நாட்களை போலவே இன்றும் செயல்படவும்.
மிதுனம்: உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும், நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
கடகம்: இன்று புதிய பொறுப்புகள் வரும். அதனால், சோர்வாக உணர்வீர்கள். பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணப்பட்டாலும் மன குழப்பம் நீங்காமல் இருக்கும்.
சிம்மம்: புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்களது ஆற்றல் மற்றும் ஆர்வத்தால் வெற்றி கிட்டும். சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.
கன்னி: இன்று செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனவே, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாக மேம்பட முயற்சி செய்யவும்.
துலாம்: உங்களது ஆளுமைப்பண்பை மேம்படுத்திக்கொண்டு, பணியில் திறமையை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். இன்று, நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்: அனைத்து வகையிலும் இன்று உங்களுக்கு ஒரு கசப்பான உணர்வை தரும் நாளாக இருக்கும். எனவே, பிரச்சினைகள் மற்றும் சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. இன்று மாலை உங்களுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கும்.
தனுசு: இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். விரும்பும் ஒன்றை அடைவீர்கள். பயணத்துக்கான ஆயத்தங்களை செய்யுங்கள். உங்கள் நட்சத்திரப்படி, நீங்கள் வியாபாரம் நிமித்தமாக வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.
மகரம்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்கள் அதிகம் இருக்கும். வேலைகளை விரைவாக நிறைவு செய்து, புத்துணர்ச்சி பெற அமைதியாக சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வது உங்களது அறிவை விரிவாக்கும்.
கும்பம்: நிதானமாக முன்னேறுவது வெற்றியைத் தரும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை அதிகம். கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் திறன் உங்களுக்கு உள்ளது. நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்கும்.
மீனம்: வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கக்கூடும். அதனால் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். புதிய பணி அல்லது புதிய ஒப்பந்தம் அல்லது புதிய திட்டங்களை தொடங்குவதற்கு இது உகந்த நாள் அல்ல. இரண்டு அல்லது சில நாட்களில் நிலைமை சீராகும்.