பஞ்சாயத்து துணைத் தலைவரை கன்னத்தில் அறைந்த எஸ்.ஐ! வேலூரில் பரபரப்பு

பஞ்சாயத்து துணைத் தலைவரை கன்னத்தில் அறைந்த எஸ்.ஐ! வேலூரில் பரபரப்பு

அனுமதி பெறாமல் காளை விடும் விழா நடத்தியதாக கூறி போலீசார் பஞ்சாயத்து துணைத் தலைவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் பாரம்பரியமாக காளை விடும் விழா நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்த பிறகு கிராமங்களில் சம்பிரதாய அடிப்படையில் காளை விடும் நிகழ்ச்சிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடிசை கிராமத்தில் நேற்று மாலை சம்பிரதாய முறையில் காளை விடும் விழா நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த காளை வளர்ப்பாளர்கள் தங்களது காளைகளை கொண்டு வந்து ஓட போட்டியில் பங்கேற்க வைத்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு வந்த விரிஞ்சிபுரம் போலீசார், உரிய அனுமதி இல்லாமல் காளை விடக் கூடாது எனக் கூறி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஓடிய ஒரு காளையால் விரிஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை லத்தியை சுழற்றியவாறு விரட்டியடித்தனர். சில இளைஞர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கலவரத்தின் போது, பூதூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜயபாலன், சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரனிடம், “முன்னதாகவே அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தால் நாங்கள் காளைகளை கொண்டு வந்திருக்க மாட்டோம்” என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சப் இன்ஸ்பெக்டர் “பர்மிஷன் ஏன் வாங்கல” என்று திட்டியதுடன், விஜயபாலனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்களை மற்ற போலீசாரும் தாக்கியதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்து துணைத் தலைவரை சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறையும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ங்கள் கிராமத்தில் சம்பிரதாயத்துக்கு காளை விடும் விழா நடக்கும். இந்த விஷயம் விரிஞ்சிபுரம் போலீசாருக்கும் நன்கு தெரியும். நேற்று விழா தொடங்கி நடந்து கொண்டிருந்தபோதுதான் போலீசார் வந்து தடுத்தனர். ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களையும், தனிப்பிரிவு போலீசார் உட்பட அனைவரும் லத்தி மற்றும் கைகளால் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர். இந்த சம்பவம் குடிசை கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் அதிர்ச்சியையும், போலீஸ் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.