சல்மான்கான் – வம்சி – தில் ராஜூ கூட்டணி உறுதி
வம்சி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவுள்ள படத்தினை தில் ராஜூ தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தினை கடைசியாக இயக்கி இருந்தார் வம்சி. இதனை தில் ராஜூ தயாரித்திருந்தார். இப்படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அதில் யார் நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்தன.
வம்சியின் முந்தைய படங்கள் போலவே, இப்படமும் முழுக்க குடும்பத்தினை மையப்படுத்தி உருவாகும் ஆக்ஷன் கதையாகும். இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது சல்மான்கானுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.