ஜப்பானில் ஜன.16-ல் வெளியாகிறது ‘புஷ்பா 2’

ஜப்பானில் ஜன.16-ல் வெளியாகிறது ‘புஷ்பா 2’

ஜப்பானில் ‘புஷ்பா 2’ திரைப்படம் ஜனவரி 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘புஷ்பா 2’. ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தினை ஜப்பானில் மொழிமாற்றம் செய்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடவுள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கவுள்ளது.

இப்படத்தின் காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே கொண்டாடப்பட்டன. தற்போது ஜப்பானில் வரவேற்பு பிரம்மாண்டமாக இருப்பதால், அங்கும் மாபெரும் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு தற்போது அட்லி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அல்லு அர்ஜுன்.