வள்ளியூரில் பொங்கல் விளையாட்டு விழா.. முன்னாள் எம்பி பரிசுகள் வழங்கினார்

வள்ளியூரில் பொங்கல் விளையாட்டு விழா.. முன்னாள் எம்பி பரிசுகள் வழங்கினார்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றோருக்கு அதிமுக முன்னாள் எம்பியும், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான சௌந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்.
 வள்ளியூர் தேவர் பெரிய தெருவில் ஆறு மற்றும் எட்டாவது வார்டு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 26 ஆம்  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சௌந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முக பாண்டியன், வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்  பொன்னரசு, நேதாஜி சுபாஷ் சேனை தென் மண்டல இளைஞரணி தலைவர் கணேசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளாளர் NG. சங்கரன், K.வெங்கடேஷ், தேமுதிக மாவட்ட செயலாளர் விஜி.வேலாயுதம், வார்டு செயலாளர் போஸ்டல் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.