பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்தது. இதையடுத்து, கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் போரை சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
இந்த நிலையில், ஆப்கனின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அப்போது, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கேப்டன் உள்பட பாதுகாப்பு படையினர் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.