பெலாரசில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தியது ரஷ்யா... பதற்றம் அதிகரிப்பு
பெலாரசில் அணுஆயுத ஏவுகணைகளை ரஷ்யா நிலை நிறுத்தியது இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யாவை பெலாரஸ் நாடு ஆதரிக்கிறது. உக்ரைனை சுற்றிவளைத்து தாக்குவதற்காக பெலாரசில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ரஷ்யா அண்மையில் பரிசோதித்த அதிநவீன ஆரச்நிக் அணுஆயுத ஏவுகணைகள், பெலாரசில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரசில் எத்தனை ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன என்றத் தகவல் இல்லை. ஆனால் அந்த ஏவுகணை மிகவும் அதிநவீனமானது என்றும், எந்த நாட்டாலும் அதை இடைமறித்து தடுக்க முடியாது என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சக்திவாய்ந்த ஏவுகணைகள், பெலாரஸ் நாட்டில் ரஷ்யா நிலைநிறுத்தி இருப்பது, உக்ரைனை போரில் ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுக்கவே எனக் கூறப்படுகிறது.