தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்... ஐடியா கொடுத்த பாஜக
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது என பழனிசாமி திட்டவட்டமாக கூறிவருகிறார். இந்த நிலையில், 2026 தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, ஓபிஎஸ்ஸின் தென் மாவட்ட வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளது.
அதனால், தனிக்கட்சி தொடங்க அவருக்கு பாஜக தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், கட்சியை பதிவு செய்யத்தான் அவர் டெல்லி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.