தென்னாப்பிரிக்க ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு - கம்பேக் கொடுக்கும் அதிவேக பவுலர்!

தென்னாப்பிரிக்க ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு - கம்பேக் கொடுக்கும் அதிவேக பவுலர்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடி வருகிறது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று கௌகாத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதன்பின் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதேசமயம் பாகிஸ்தான் தொடரின் போது அறிமுகமான ருபின் ஹர்மானும் ஒருநாள் அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். மேற்கொண்டு டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஸி, மார்கோ ஜான்சன், ரியான் ரிக்கெல்டன், கேசவ் மஹாராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இரு அணிகளிலும் இடங்களைத் தக்கவைத்துள்ள நிலையில், காயம் காரணமாக காகிசோ ரபாடா அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.