உலக குத்துச்சண்டை போட்டி: நிகத் ஜரீன், ஜெய்ஸ்மின் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை போட்டி உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஓமர் இசாஸ் அன்னுடன். இந்தியாவின் ஜதுமணி சிங் மோதினார். இதில் ஜதுமணி சிங் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் உல்சான் சர்சென்பெக்கை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். இறுதிப் போடடியில் ஜெய்ஸ்மின், பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீன தைபேவின் வு-ஷிஹ்யி-யுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
ஆடவருக்கான 55 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பவன் பர்த்வால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லிஸ் ட்ரோ பிரிட்ஜை வீழ்த்தி இறுதி சுற்றில் கால் பதித்தார். மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் நிகத் ஜரீன், உஸ்பெகிஸ்தானின் கனீவா குல்சேவரை எதிர்கொண்டார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறு இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.