BREAKING... விமான விபத்து: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணம்

BREAKING... விமான விபத்து: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணம்

மகாராஷ்டிராவில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானப் பயணம் மேற்கொண்டார். பாராமதியில் நடைபெறவிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அவர் பயணித்த சிறிய ரக விமானமானது, பாராமதி விமான நிலையத்தில் காலை 9.15 மணியளவில் தரையிறங்கி ஓடுபாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த விமானத்தில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் விமானம் முழுவதுமாக தீயில் கருகி எலும்புக்கூடானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த முழு தகவல் இன்னும் வெளிவரவில்லை.