கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கேரளா​வின் கொல்​லம் மாவட்​டம் நெடு​வாத்​தூர் கிராமத்​தில் 3 குழந்​தைகளு​டன் வசித்த அர்ச்​சனா (33) மற்​றும் அவரது இரண்​டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டது. மது போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன் அர்ச்​ச​னாவை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் நேற்று அதி​காலை​யில் அர்ச்​சனா அரு​கில் இருந்த கிணற்​றில் குதித்​தார். தகவலின் பேரில் தீயணைப்பு படை​யினர் அங்கு விரைந்து வந்​தனர்.

சோனி குமார் (36) என்ற வீரர் கிணற்​றில் இறங்கி உயிருடன் இருந்த அர்ச்​ச​னாவை மீட்டு மேலே கொண்​டுவர முயன்​றார். போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன் கிணற்​றின் சுற்​றுச்​சுவர் மீது சாய்ந்து நின்​றிருந்த நிலை​யில் திடீரென கிணற்று சுவர் இடிந்து அர்ச்​சனா மற்​றும் சோனி குமார் மீது விழுந்​தது. சிவகிருஷ்ணனும் உள்ளே விழுந்​தார். இதையடுத்து நடை​பெற்ற மீட்​புப் பணி​யில் அர்ச்​ச​னா, சிவகிருஷ்ணன் ஆகிய இரு​வரும் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். படு​கா​யம் அடைந்த சோனி குமார் மருத்​து​வ​மனை​யில்​ சிகிச்​சை பலனின்​றி உயிரிழந்​தார்​.