கர்நாடக ஆளுநர் குடும்பம் மீது ரூ.50 லட்சம் வரதட்சனை புகார்.. வெளியான பகீர் பின்னணி!

கர்நாடக ஆளுநர் குடும்பம் மீது ரூ.50 லட்சம் வரதட்சனை புகார்.. வெளியான பகீர் பின்னணி!
கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட்டின் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட்டின் பேரன் தேவேந்திர கெலாட்டுக்கும், திவ்யா கெலாட் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 4 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தேவேந்திர கெலாட் மற்றும் அவரது பெற்றோர் 50 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக திவ்யா கெலாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தேவேந்திர கெலாட் மதுபோதையில் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயன்றதாகவும், தனது 4 வயது குழந்தையை பார்க்க தேவேந்திர கெலாட்டின் குடும்பத்தினர் அனுமதி மறுப்பதாகவும் திவ்யா கெலாட் பரபரப்பு குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு தான் கருவுற்று இருந்த காலத்தில் இருந்து இந்த கொடூரம் தொடர்வதாகவும், தேவேந்திர கெலாட்டுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் திவ்யா கெலாட் குற்றஞ்சாட்டி உள்ளார். தேவேந்திர கெலாட்டின் தந்தை ஜிதேந்திர கெலாட் முன்னாள் எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது.