’தாதா சாகிப் பால்கே’ பயோபிக்: ஜூனியர் என்.டி.ஆர் விலகல்?

‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் ராஜமவுலி - ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணமாக, ராஜமவுலியின் மகன் கார்த்தி இயக்கத்திலேயே படம் உருவாகிறது, ஆமிர்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி வேறு அதே படத்தை உருவாக்குகிறது என்பதை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பில் இருந்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் விலகலால், ராஜமவுலி தரப்பில் இருந்து ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்துக்கு வேறொரு நாயகனை இறுதி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.