அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கையும், வெனிசுலா இடைக்கால அதிபரின் நிலைப்பாடும்!
“வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் சரியானதைச் செய்ய தவறினால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். அது நிகோலஸ் மதுரோ சந்திப்பதைவிட பெரிதாக இருக்கும்” என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அவரது நாட்டுக்கே சென்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்த அமெரிக்க பாதுகாப்புப் படை, அவர்கள் இருவரையும் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது. அவரது கைதுக்கு வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். வெனிசுலாவின் ஒரே அதிபர் நிகோலஸ் மதுரோதான் என்றும், அவரை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கடுமையான வார்த்தைகளில் கூறி இருந்தார்.
பின்னர், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்குமாறு துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.