தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சம்

சென்னையில் இன்று (அக் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பல நாடுகளும், சர்வதேச முதலீட்டாளர்களும் அதிகளவில் தங்கம் வாங்குவதால், சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 13) காலை தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 195 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 11,580 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, 92,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.94,600க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1960, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கத்திற்கு போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் சரமாரியாக உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 200 ரூபாயை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.