கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. தற்போதைய விலை எவ்வளவு?

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. தற்போதைய விலை எவ்வளவு?

புத்தாண்டு தினமான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், புத்தாண்டு தினமான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.