வெனிசூலா அதிபரை நாட்டுக்குள் புகுந்து தூக்கிச் சென்றது அமெரிக்க ராணுவம்

வெனிசூலா அதிபரை நாட்டுக்குள் புகுந்து தூக்கிச் சென்றது அமெரிக்க ராணுவம்

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மடூரோவை, அவரின் நாட்டுக்குள் புகுந்து அதிரடியாக அமெரிக்க ராணுவம் தூக்கிச் சென்றதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக வெனிசூலாவுக்கும், அமெரிக்காவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. வெனிசூலாவில் இடதுசாரி அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால், போர் மூளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வெனிசூலா தலைநகர் காரகாசில் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அமெரிக்க போர் விமானம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மடூரோவையும், அவரின் மனைவியையும் வெனிசூலா நாட்டுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் தூக்கி வந்து விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை வெனிசூலா மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. அதேநேரத்தில் ஐநா சபையின் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வெனிசூலா வலியுறுத்தியுள்ளது.