‘மூன் வாக்​’ படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

‘மூன் வாக்​’ படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபுதேவா ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம் ‘மூன் வாக்’. யோகி பாபு, அஜு வர்​கீஸ், அர்​ஜுன் அசோகன், சதீஷ், நிஷ்மா செங்​கப்​பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்​ஸ்லி உள்பட பலர் நடித்துள்​ளனர். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசையமைத்​துள்​ளார்.

29 ஆண்​டு​களுக்​குப் பிறகு பிரபு தே​வாவுடன் ரஹ்​மான் மீண்​டும் இணைந்​துள்​ளார். இப்​படத்​தில் இடம் பெற்​றுள்ள 5 பாடல்​களை​யும் ஏ.ஆர்​.ரஹ்​மானே பாடி​யுள்​ளார். ஒரு படத்​தின் மொத்த பாடல்களை​யும் அவரே பாடி​இருப்​பது இது​தான் முதன்​முறை.

இதில் இசைக்​கும் நடனத்​துக்கும் குறைவே இருக்​காது. 3 வருடங்களாக உருவாக்​கிய இந்த திரைப்​படம் 2026 கோடை​யில் வெளி​யாக​வுள்​ளது. இது முழுமை​யான காமெடி படம்.

இதில் ‘ஏத்து’, ‘மெகரி​னா’, ‘மயிலே’, ‘டிங்​கா’, ‘ஜிகர்’ என மொத்​தம் 5 பாடல்​கள் உள்​ளன. ஒவ்​வொரு பாடலும் நட்​பு, உழைப்​பு, சந்தோஷம் மற்​றும் வாழ்க்கையைக் கொண்​டாடும் வகை​யில் இருக்​கும்” என்​றார்.