299 டார்கெட்- இந்தியாவா, தென்னாப்பிரிக்காவா? ஜெயிக்கப் போவது யார்?

299 டார்கெட்- இந்தியாவா, தென்னாப்பிரிக்காவா? ஜெயிக்கப் போவது யார்?

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பெற 299 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி, மழை குறுக்கிட்டதால் இரண்டு மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 127 ரன்களை குவித்த ஜமிமா 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இவர்களுக்கு பிறகு களமிறங்கிய தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காஹா 10 ஓவர்களில் 58 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.