பயணிகளுக்கு நற்செய்தி; மதுரை டூ ஓகா வாராந்திர சிறப்பு ரயில்!
வருகின்ற நவம்பர் 3, 10, 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.3) காலை 8 மணியிலிருந்து துவங்கும் என மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு விழாக்கால சிறப்பு ரயில்களை மேற்கு ரயில்வே இயக்குகிறது. அதன்படி ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா-மதுரை விரைவு வாராந்திர சிறப்பு ரயில் (09520) வருகின்ற நவம்பர் 3, 10, 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) இரவு 10 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் காலை 11.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் மதுரை-ஓகா விரைவு வாராந்திர சிறப்பஇருந்து (09519), மதுரையில் இருந்து நவம்பர் 7, 14, 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் (வெள்ளிக்கிழமைதோறும்) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும்
இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 10, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 4, மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் 2 என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.