தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்

தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்

தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர்.

ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் 'தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்' என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர்.

நீதித் துறை​யின் செயல்​ பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள்.

குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம் தொடர்ந்து வாக்குகளை திருடு​வ​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிராக 100% ஆதா​ரம் இருக்​கிறது என்​றும் ஹைட்​ரஜன் குண்டு இருக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார். ஆனால், அதற்கு உரிய ஆதா​ரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் நடை​முறையை வெளிப்​படை​யாக தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம் நீதி​மன்ற உத்​தர​வின்​படி இந்த பணி நடை​பெறு​வது தெரி​கிறது. தகு​தி​யற்ற பெயர்​கள் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, தகு​தி​யுடைய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

தொடர்ந்து தேர்​தலில் தோல்வி அடை​யும் அரசி​யல் கட்​சிகள் விரக்​தி​யடைந்து இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களை கூறி வருகின்றன. தேர்​தல் ஆணை​யம் தனது வெளிப்​படைத் ​தன்மையை தொடர வேண்​டும். அதே​நேரம், அரசி​யல் சாசன அமைப்​பு​களின் செயல்​முறையை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மதிக்க வேண்​டும். ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது