வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும்; ராஜ்நாத் சிங் பேச்சு

வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும்; ராஜ்நாத் சிங் பேச்சு

வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை 100% ஆக உயர்த்துவதை இந்தியா பரிசீலித்து வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்த புனிதமான நாசிக் பூமிக்கு வரும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு தெய்வீக பூமியில் இருப்பது போல் உணர்கிறேன். உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை 100% ஆக உயர்த்துவதே எங்கள் நோக்கம்.

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது.

ஒரு காலத்தில், நாடு தனது பாதுகாப்பு தளவாடங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற நாடுகளைச் சார்ந்திருந்தது. கிட்டத்தட்ட 65-70 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று, இந்த நிலைமை மாறிவிட்டது; இப்போது இந்தியா தனது சொந்த மண்ணில் 65% பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியைச் செய்கிறது.

மிக விரைவில், எங்கள் உள்நாட்டு உற்பத்தியையும் 100% ஆக மாற்றுவோம். 2029ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியையும், பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியில் ரூ.50,000 கோடியையும் அடைய நாங்கள் இப்போது இலக்கை நிர்ணயித்துள்ளோம்.வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை 100% ஆக மாற்ற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.