சென்ட்ரலில் - கோயம்பேடு டூ விமான நிலைய வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்ட்ரலில் - கோயம்பேடு   டூ விமான  நிலைய வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு செல்​லும் வழித்​தடத்​தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

அதாவது ஆலந்​தூர் - விமான நிலை​யம் இடையே தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு நேரடி​யாக மெட்ரோ ரயில் சேவை இல்​லாத​தால் பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்​தனர். தற்​காலிக​மாக சேவை ரத்​தான​தால் பயணி​கள் ஆலந்​தூரில் இறங்​கி, விம்​கோ நகர் - விமான நிலை​யம் செல்​லும் தடத்​துக்கு சென்​று, மெட்ரோ ரயி​லில் சென்​றனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில், “தொழில்​நுட்ப கோளாறால், சென்ட்​ரல் - விமான நிலை​யம் மெட்ரோவுக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்​காலிக​மாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில்​நுட்ப கோளாறை சரிசெய்​யும் பணி​யில் பொறி​யாளர்​கள் மும்முரமாக ஈடு​பட்டு வரு​கின்​றனர்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும்,  சென்னை சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு, அண்​ணா நகர் வழி​யாக வி​மான நிலை​யத்​துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை பா​திக்​கப்​பட்​டது.