டாஸ்மாக், கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ்!

டாஸ்மாக், கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ்!

தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர் களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும்.

அதேபோல், கூட்​டுறவு சங்​கங்​களில் ஒதுக்​கப்​படக்​கூடிய உபரித் தொகையை கணக்​கில் கொண்டு அச்​சங்​கங்​களில் பணிபுரி​யும் பணி​யாளர்​களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்​கப்​படும். உபரி தொகை இல்​லாமல் உள்ள சங்​க பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்​றும் கருணை தொகை வழங்​கப்​படும்.

போனஸ் சட்​டத்​தின் கீழ் வராத நிகரலாபம் ஈட்​டும் சங்​கங்​களின் பணி​யாளர்​களுக்கு 20% வரை போனஸ், கருணைத் தொகை வழங்​கப்​படும். போனஸ் சட்​டத்​தின் கீழ் வராதநிகர லாபம் ஈட்​டாத தலை​மைச் சங்​கங்​கள் மற்​றும் மத்​திய சங்​கங்​களாக இருப்​பின் அவற்றில் பணிபுரி​வோருக்கு ரூ.3000, தொடக்க சங்​கங்​களில் பணிபுரி​யும் பணி​யாளர்​களுக்கு ரூ.2,400-ம் கருணை தொகையாக வழங்கப்படும்.