நவம்பர் 28.. இன்று உங்க ராசிக்கு எப்படி?

நவம்பர் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

நவம்பர் 28.. இன்று உங்க ராசிக்கு எப்படி?

மேஷம்: இன்று எதிர்பார்க்காத அற்புதமான சம்பவங்களும், ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன. இருந்தாலும் அவை நன்மை பயப்பதாகவே இருக்கக்கூடும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் வேலையை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஏமாற்றம் காரணமாக, பல விஷயங்களில் தேவையில்லாத உணர்ச்சிகளை வெளிப்படுத்த நேரிடும். அவர்களை பாதுகாப்பதற்கான உங்கள் அணுகுமுறை யாருக்கும் உகந்ததாக இருக்காது.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் ஆசை இன்று அதிகமாக இருக்கும். இது பயணத்திற்கு உகந்த நேரம். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம்: வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த விவேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும். வேலை செய்வதற்கான ஆற்றல் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சிம்மம்: சிரமங்கள் மற்றும் தடைகளை திறமையோடு கையாளுவதோடு, வெற்றியடைவதே உங்கள் திட்டவட்டமான இலக்காக இருக்கும். வியாபாரத்தில் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக தொடரும்.

கன்னி: வாழ்க்கையில் திருப்புமுனை அவசியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வது நல்லது. இன்று எதை செய்தாலும் அதை சிறப்பாகவே செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புண்டு.

துலாம்: இன்று உற்சாகம் நிறைந்த நாள். நண்பர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எனவே, அவர்களுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையிடம் இருந்து பல நன்மைகள் இன்று தேடிவரும். நெருங்கிய உறவினரோடு, இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள்.

விருச்சிகம்: உங்கள் விருப்பங்களை அழுத்தமாக, மோதல் போக்குடன் சொல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும், உங்களை பற்றி சிலர் தவறாக சித்தரிக்காத வண்ணம் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய அளவிலான திட்டங்களில் பிரச்சினை ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும்.

தனுசு: பணியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கிடைக்கலாம். கடை வைத்திருப்பவர்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்: நீங்கள் தீவிரமான காதல் உள்ளம் படைத்தவர். இருந்தாலும், கற்பனை உலகத்திலேயே வாழ்வது நல்லதல்ல. ஏனெனில், உங்களை சிக்கல்கள் பின்தொடர்கின்றன. நீங்கள் தொழிலதிபராக இருந்தால், உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்: நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த எதிரி என்பதையும் நிரூபிப்பீர்கள். உங்கள் எதிரிகளின் திட்டங்களை தெரிந்து கொள்வது, உங்களுடைய சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். கடுமையான சூழலில் உங்கள் வலிமை வெளிப்படும்.

மீனம்: பணத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். இன்று முழுவதுமே, அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இணக்கமாக செயல்படுவார்கள்.