சென்னைக்கு ஒரு குட் நியூஸ் : சத்தமே இல்லாம வருது ஸ்பார்ட்ஸ் சிட்டி- தமிழக அரசு திட்டம்

சென்னைக்கு ஒரு குட் நியூஸ் : சத்தமே இல்லாம வருது ஸ்பார்ட்ஸ் சிட்டி- தமிழக அரசு திட்டம்

சென்னை குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

 செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது. இந்த விளையாட்டு நகரம் ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தில் கட்டப்பட உள்ளது. 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய். இந்த மீட்கப்பட்ட நிலத்தில்தான் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. 

இத்திட்டத்தின் வடிவமைப்பு, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்ததாரரை நியமிக்க தற்போது டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன,

ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை திமுக அரசு 18/செப்டம்பர்/2021 இல் மீட்டது.

இங்குதான் தற்போது விளையாட்டு நகரம் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு  தொழில்நுட்ப - பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம். ஓஎம்ஆர் சாலையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது

இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது.

சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது. 

இந்த விளையாட்டு நகரத்தின் மாதிரி புகைப்படம்  சர்வதேச நாடுகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது மிகப்பெரிய முகப்பு அரங்கு இதில் அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு கால்பந்து அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் 4 டென்னிஸ் கோர்ட்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. விளையாட்டு அரங்குகள்: உள் விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

அதற்காக தனியாக மிகப்பெரிய அரங்கு இங்கே உருவாக்கப்பட்டு உள்ளது. தடகள போட்டிகளுக்கான அரங்கு தனியாக இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மற்ற விளையாட்டு அரங்குகள் முகப்பு பகுதிக்கு பின்பாக அமைக்கப்பட்டு உள்ளன. தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தும் அரங்குகளும் இங்கேயே அமைக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதன் மாதிரி படம்தான் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பார்க்கவே வியக்க வைக்கும் வகையில் இந்த மாதிரி படம் உள்ளது. இதை பகிர்ந்து, இது அடுத்த ஒலிம்பிக் நடக்கப்போகும் இடமல்ல! அடுத்த ஆசிய போட்டிகள் நடக்கவிருக்கும் இடமுமல்ல! தமிழ்நாட்டில் அமையவுள்ள விளையாட்டு நகர அமைப்பின் படம் என்று இந்த ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளது. இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.