"என்னோட ராசி நல்ல ராசி..." இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றிதான்!
மேஷம்: உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருந்து, அவர்கள் மனதை வெல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில காரணங்களுக்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிருப்தி ஏற்படும். எனினும் புதிய நண்பர்கள் உடன் விருந்துக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: சில அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்க்கப்பட்டபடி எதுவும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் கடவுளின் ஆசி காரணமாக, இந்த நிலைமையை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள்.
மிதுனம்: இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் உங்களது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களும் உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். பரஸ்பரம் திருப்தியான உணர்வு ஏற்படும். மேலும் வேடிக்கையும் குதூகலமும் நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம்: இன்று முக்கியமான நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படலாம். கூடவே உங்களது பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலை வாய்ப்பையும் நீங்கள் நிராகரிக்க கூடும்.
சிம்மம்: பழைய நண்பர்களுடன் உள்ள தொடர்பை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இன்று சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். அதனால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். விருந்தினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி: உறவுகள் பாதிக்கப்படலாம். உங்கள் மனதில் குழப்பம் அதிகம் இருக்கும். மனதிற்கும் அறிவுக்கும் இடையே போராட்டம் ஏற்படும். மற்றவர்கள் கருத்தின்படி நடப்பதைவிட, உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது.
துலாம்: நீங்கள் சாதனை செய்யும் வாய்ப்பு உள்ளது. பணியில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு அல்லது குடும்பம் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துவீர்கள். வர்த்தகத்தில் சிறந்த விளங்கி, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை திறமையாக நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்: செலவுகள் அதிகரிக்கும் நாள். இந்த முறை உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்கு செலவு செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட பணம் உயர்ந்ததல்ல என்ற எண்ணத்தை கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்வீர்கள்.
தனுசு: இன்றைய தினத்தை சிறப்பாக திட்டமிடலாம். உங்கள் செயல்திறன் காரணமாக நீங்கள் பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில், உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை திறமையாக கையாள்வீர்கள். உங்களது இந்த அணுகுமுறையின் காரணமாக, அனைவருக்கும் பிடித்த வகையில் இருப்பீர்கள்.
மகரம்: எதிலும் வெற்றி அடையப் போகும் நாளாக இன்று அமையும். குறிப்பாக பணியிடத்தில் சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சினையை பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.
மீனம்: தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரிடம் மட்டுமே நீங்கள் நெருக்கமாக பழகும் தன்மை கொண்டவர். இன்றைய தினம் நெருக்கமானவர்களால் சந்தோஷம் வந்து சேரும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்று புத்துணர்வு பெறுவீர்கள்.