திருமணத்திற்கு டிசம்பர் 1ம் தேதியை சமந்தா தேர்வு செய்தது ஏன்?

திருமணத்திற்கு டிசம்பர் 1ம் தேதியை சமந்தா தேர்வு செய்தது ஏன்?

சமந்தா தனது திருமண புகைப்படங்களை வலைத்தளங்களில் பகிரும்போது 01-12-2025 என்று திருமண தேதியையும் குறிப்பிட்டார். இதையடுத்து திருமணத்திற்கு சமந்தா டிசம்பர் 1ஆம் தேதியை தேர்வு செய்தது ஏன்? இந்த தேதிக்கு அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் சிறப்பு தொடர்பு உள்ளது என்பது தெரியுமா?

நாக சைதன்யா கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதம் சோபிதா துலிபாலை மணந்தார். டிசம்பர் 4, 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சோபிதாவை கரம்பிடித்தார். ஆனால் இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் டிசம்பர் 1ஆம் தேதியே தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் முதலாமாண்டு திருமண ஆண்டு விழாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதே டிசம்பர் மாதத்தில் சமந்தா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.