மதுரை அருகே பயங்கர விபத்து! 2 ஆம்னி பேருந்துகள் மோதி 3 பேர் பலி, 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மதுரை அருகே பயங்கர விபத்து! 2 ஆம்னி பேருந்துகள் மோதி 3 பேர் பலி, 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் பெண்கள் உட்பட 3 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கமாக, வேகமாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து மோதியுள்ளது. பஸ் மோதிய வேகத்தில் முன்னால் இருந்த ஆம்னி பேருந்து அருகில் உள்ள மின்கம்பத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின் பக்கமும், மோதிய பேருந்தின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. அப்போது விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியின் விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர். இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் அதிகளவு மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், முன்னாள் இருந்த பேருந்து, பயணிகள் டீ குடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டதும், அப்போது திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இந்த பேருந்தின் மோதியதும் தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த கனக ரஞ்சிதம் (65), செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன் (23) மற்றும் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.