"ஆடு நனையுதுன்னு ஓநாயும் அழுதுச்சான்"-உதயநிதிக்கு பழமொழி சொன்ன பாஜக கே.பி.ராமலிங்கம்

"ஆடு நனையுதுன்னு ஓநாயும் அழுதுச்சான்"- பிஜேபியுடன் சேர்ந்த கட்சிகள் முடிந்துவிட்டது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதை அதிமுகவினர் கேட்டால் வாயில் சிரிக்க மாட்டார்கள் அதில் ........... தான் சிரிப்பார்கள்-பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் தொலைபேசி வாயிலாக பாஜக., கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் பாஜக மருத்து அணி சார்பில், சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இந்த முகாமில் கண், பல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பயனடைந்தனர்.பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றார்.

அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஒரே நாடு, ஒரே தேர்தல் நாட்டிற்கு மிக மிக அவசியம். அரசியல் கட்சிகள் சுயநலத்தை பார்க்காமல் அமைதியாக கருத்துக்களை கூற வேண்டும். அடிக்கடி தேர்தல் நடப்பதால் 20% நிதி நிலையை அதற்காக செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. லஞ்சம் கொடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கும் அரசியல் கட்சிகள் தான் ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கிறது என்றால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை போடுவதற்கு சமம். 2044 வலிமையான ஆட்சி அமைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேற்கப்பட வேண்டியது. ஒரே நாடு, ஒரே தேர்தலில் சிக்கல் இருக்கத்தான் செய்யும். அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமைப்படுத்த கட்சி பாஜக., மட்டுமே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு ஈடுபாடு, காரண கருத்தா என சொல்லுகிறார்கள்.

அது உண்மை என்றால், அவரை கைது செய்ய வேண்டும். அதிமுக.,வை பாஜக அழிப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிற கதைதான். திமுக., ஓநாய் கூட்டம். அதிமுக.,வை பாஜக அழிப்பதாக சொல்வதை அதிமுக.,வினர் கேட்டால் வாயில் சிரிக்க மாட்டார்கள். திமுக., ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டணி கட்சியினரே நினைக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் பாஜக., தொலைபேசி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை, 2 லட்சத்தை கடந்துவிட்டது.

உறுப்பினர் சேர்க்கையில் அவர் அவர்களே அவருடைய தொலைபேசி எண்ணில் இருந்து சேர்ந்து வருகின்றனர். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி பேசினர்...