தேவ்தத் படிக்கல் 4-வது சதம்: கர்நாடக அணிக்கு தொடர் வெற்றி

தேவ்தத் படிக்கல் 4-வது சதம்: கர்நாடக அணிக்கு தொடர் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி வீரர் தேவ்தத் படிக்கல் தனது 4-வது சதத்தை விளாசினார். இப்போட்டியில் கர்நாடக அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியைத் தோற்கடித்தது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய கர்நாடக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 108, ஸ்மரண் ரவிச்சந்திரன் 60, கே.எல்.ராகுல் 35, அபிநவ் மனோகர் 79 ரன்கள் குவித்தனர். இந்தத் தொடரில் தேவ்தத் படிக்கல் தனது 4-வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.