அரசுக்கு எதிரான போராட்டத்தில் 116 பேர் பலி - ஈரானில் தொடரும் பதற்றம்

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 116 பேர் பலி - ஈரானில் தொடரும் பதற்றம்

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளும் அரசாங்கம் மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிகிறது. கடந்த வியாழனன்று அந்நாட்டின் பட்டத்து இளவரசர் நாடு கடத்தப்பட்டதை அடுத்து மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

போராட்டம் பெரிதானதை அடுத்து, ஈரானில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை அரசு துண்டித்தது. இந்த போராட்டம் நாட்டில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரவியுள்ளதால் அவர்களை அடக்கும் முயற்சிகளில் அரசு பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக தெஹ்ரான் முழுவதும் ‘சர்வாதிகாரிக்கு மரணம்’ மற்றும் இஸ்லாமிய குடியரசுக்கு மரணம் போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகிறது.

இந்த மக்கள் போராட்டத்தில் இதுவரை 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டினர் அங்கு வசிக்கும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு, அங்கு ஷா வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக மாறியது. இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் உச்ச தலைவராக அயதுல்லா அலி காமேனி பதவியேற்றார். இஸ்லாமிய சட்டத்தின்படி, ஈரான் அரசுக்கு, நீதித்துறை மற்றும் ஊடகம் என அனைத்து துறைகளிலும் தங்கள் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் எடுக்கும் முடிவுகளால் தற்போது அந்நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே ஷா வம்சத்தை சேர்ந்த ரேஸா பாலவி இஸ்லாமிய புரட்சியின் போது தனது 17 வயதில் நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர் முந்தைய மரபுவழி மன்னராட்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஈரான் நாட்டிற்கு திரும்பி வரும் பட்சத்தில் அங்கு இஸ்லாமிய ஆட்சிக்கு முடிவுக்கு வந்து மீண்டும் குடியரசு ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.