வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை

திரு​மலை பத்​மாவதி விருந்​தினர் மாளி​கை​யில் வைகுண்ட ஏகாதசி ஏற்​பாடு​கள் குறித்து  தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசி​யான டிசம்​பர் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்​கப்​படு​கிறது. தொடர்ந்து 10 நாட்​கள் வரை, அதாவது ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்​திற்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர்.

முதல் 3 நாட்​கள், அதாவது டிசம்​பர் 30, 31 மற்​றும் ஜனவரி 1-ம் தேதி ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்து கொண்ட பக்​தர்​களுக்கு மட்​டுமே தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

அதன் பின்​னர், ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் விதத்​தில் டோக்​கன்​கள் இல்​லாமல் கூட தரிசனம் செய்​ய​லாம்.

மேலும் இந்த நாட்​களில் தின​மும் 15000 ரூ.300 சிறப்பு தரிசன​மும், 1000 வாணி அறக்​கட்​டளை மூலம் டிக்​கெட் பெற்​றவர்​களுக்​குக்​கான தரிசன ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த 10 நாட்​களும் விஐபி தரிசனம், முதி​யோர், மாற்று திற​னாளி​களுக்​கான சிறப்பு தரிசனங்​கள் முற்​றி​லு​மாக ரத்து செய்​யப்​படு​கின்​றன.

டிசம்​பர் 10-ம் தேதி ஆன்​லைன் மூலம் உள்​ளூர் பக்​தர்​களுக்கு தின​மும் 5 ஆயிரம் டிக்​கெட் வழங்​கப்​படும். டிசம்​பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு வாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் ஆன்​லைன் மூலம் வழங்​கப்​படும். அதே நாள் மதி​யம் 3 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​களும் ஆன்​லைனில் வெளி​யிடப்​படும். இதனை பெற்​றுக்​கொண்ட பக்​தர்​கள் சொர்க்க வாசல்​ தரிசனம்​ செய்​ய​லாம்​.

இவ்​வாறு பிஆர்​ நா​யுடு கூறி​னார்​.